பூமியை தாக்கவுள்ள சிறுகோள் – 2068 பூமியின் முடிவா?
2068 ஆம் ஆண்டு பூமியை ஒரு சிறுகோள் தாக்கவுள்ளதால் அது பூமியின் முடிவாக இருக்குமோ என பலராலும் எண்ணப்படுகிறது.
மூன்று கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட அதாவது 300 மீட்டர் அளவை கொண்ட அப்போபிஸ் எனும் சிறுகோள் ஒன்றின் சுற்றுவட்ட பாதையில் ஏற்படக்கூடிய மாற்றத்தால் அது 2068 ஆம் ஆண்டு பூமியில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தலாம் என வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு காஸ் ஆஃப் கேயஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். முன்னதாகவே 2029 இல் இந்த கோள் பூமியை கடந்து மிக அருகில் தனது சுற்றுவட்ட பாதையில் செல்வதை மனித கண்களால் சாதாரணமாக பார்க்க முடியுமாம். இது ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியில் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின் இந்த கோளின் சுற்றுப்பாதையில் ஏற்படக்கூடிய யார்கோவ்ஸி எனும் முடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, 2068 இல் இது பூமியில் விழுந்து நொறுங்கும் என கூறப்பட்டுள்ளது. விண்கற்கள் தங்கள் உறிஞ்சிய வெப்பத்தை கதிர்வீச்சு செய்வதன் விளைவாக தான் இந்த முடுக்கம் ஏற்படுகிறது. இந்த கதிர்வீச்சின் செயல்கபாடுகள் தான் கோள்களின் வட்டப்பாதையில் உந்துதல்களை அல்லது மாற்றங்களை ஏற்படுத்தி நகர்த்துகிறது. இந்த கோள் தற்பொழுதே தனது சுற்றுப்பாதையிலிருந்து வருடத்திற்கு 170 மீட்டர் தூரம் நகர்கிறதாம்.
இந்த கோள் பூமியில் விழுந்தாலும் ஐரோப்பாவின் ஏதேனும் ஒரு இடத்தில தான் விழுமாம். அப்படி அது நிகழ்கையில் அதன் தாக்கம் ஹிரோஷிமா குண்டு வெடிப்பை காட்டிலும் 65,000 மடங்கு அதிகமான ஆபத்துகளையும் பேரழிவுகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.