இன்று பூமியை கடந்து செல்லும் ஆபத்தான சிறுகோள்.
ஜூலை 24 அன்று, மணிக்கு 48,000 கிலோமீட்டர் வேகத்தில் 170 மீட்டர் நீளமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மிக அருகாமையில் கடக்கும் என்று நாசா எச்சரிக்கை விடுத்திருந்தது. சிறுகோள் 2020 ND எனப்படும் ஒரு பெரிய அளவு சிறுகோள் பூமியிலிருந்து சுமார் 0.034 வானியல் அலகுகள், அதாவது, 5,086,328 கிலோமீட்டர் என்ற தொலைவில் பூமியை கடந்து செல்கிறது.
பூமிக்கு மிக மிக அருகாமையில் இந்த சிறுகோள் கடந்து செல்வதால் அபாயகரமான சிறுகோள்கள் பிரிவின் கீழ் இந்த சிறுகோள் சேர்க்கப்பட்டுள்ளது. 5,086,328 கிலோமீட்டர் என்பது வானியல் கணக்கின்படி பூமிக்கு மிக அருகிய தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறிப்பாக, 0.05 au அல்லது அதற்கும் குறைவான சுற்றுப்பாதை குறுக்குவெட்டு தூரம் (MOID) கொண்ட அனைத்து சிறுகோள்களும் PHA களாக கருதப்படுகின்றன. விண்கற்கள் PHA களாக வகைப்படுத்தப்பட்டாலும் அது பூமியை பாதிக்காது என்றும் நாசா தெரிவித்திருந்தது.
மேலும், இத்தகைய சிறுகோள்களை கண்காணிப்பதன் மூலமும், அவற்றின் சுற்றுப்பாதைகளை அவ்வப்போது புதுப்பிப்பதன் மூலமும், நெருக்கமான அணுகுமுறை புள்ளிவிவரங்களையும் அவற்றின் அச்சுறுத்தலையும் நாம் நன்கு கணிக்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…