உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஆசிப் அலி சர்தாரி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர், ஆசிப் அலி சர்தாரி. 65 வயதாகும் இவர் மீது வங்கி மோசடி வழக்கு உட்பட 3 ஊழல் வழக்குகள் உள்ளது. அந்த வழக்குகள் குறித்த விசாரணை இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், சர்தாரி மீது பல குற்றசாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) துணைத்தலைவர் ஆசிப் அலி சர்தாரி, உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025