வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது.6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது.
மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை 5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது.
இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தது.இதைத்தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க இந்த மூன்று சமூகவலைத்தளங்கள் முடங்கியதால் மக்கள் ட்விட்டரின் பக்கம் படையெடுக்க தொடங்கினர்.இதனால் ட்விட்டரில் திடிர் திருவிழா ஏற்பட்டது.இதற்கிடையில் சில சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற்றது.ஒரு புறம் இணையவாசிகள் மீம்ஸ்களை பதிவிட மறுபுறம் அங்காளி பங்காளிகளாக இருக்கும் பிரபல நிறுவனங்களுக்கிடையே நகைச்சுவையான உரையாடல் நடைபெற்றது.
முதலில் ட்விட்டர் அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பிக்க வாட்ஸப் பின்பு வந்து இணைய அதனைத்தொடர்ந்து வந்த மெக் டொனால்ட்ஸ் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு நகைச்சுவையாக பதிலளிக்கும் ட்விட்டர் என் நண்பர்களுக்கு 59.6 மில்லியன் நஜ்ஜஸ்ட் வேணும் என்று பதிவிட்டுள்ளது.இப்படி பல பிரபல நிறுவனங்களின் அரட்டை இங்கு நடந்துள்ளது அவற்றில் சில தொகுப்புகள் இதோ ,
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…