ஆசியா பீபி விடுதலைக்கு எதிரான சீராய்வு மனு தள்ளுபடி…!!
மதத்தை இழிவு படுத்தியதாக கூறிய வழக்கில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசியா பீபி விடுதலைக்கெதிரான சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2010-ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்தது. . இதை எதிர்த்து 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஆசியா பீபி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கிக்கின் விசாரணை முடிந்து கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது உச்சநீதிமன்றம் .
இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த போது இம்மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்