அஸ்வினை பஞ்சாப் அணியின் கேப்டனாக அறிவித்தார் சேவாக்
இந்தாண்டு ஐபிஎல் சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. மீண்டும் சென்னை அணியின் கூல் கேப்டனாக மஹிந்திரசிங் தோனி மீண்டும் களமிறங்க உள்ளார். ஆனால் வருடாவருடம் சென்னை அணிக்காக களமிறங்கும் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இந்தாண்டு சென்னை அணியில் இடம்பெறாதது வருத்தமளித்தாலும் பஞ்சாப் அணி அவரை 7 கோடிக்கு மேல் தொகை கொடுத்து எடுத்து உள்ளது.
அந்த அணியில் ஏற்கனவே இருந்த அக்சர் படேல் மட்டும் தக்கவைக்கபட்டு மற்ற வீரர்கள் ஏலத்தில் கழட்டி விடப்பட்டனர். பின்னர் அஸ்வின், யுவராஜ் சிங், கே.எல்.ராகுல், மில்லர் ஆகியோரை எடுத்தது. அந்த அணி தலைமை கேப்டன் யார் என்பதை விரேந்திர சேவாக் லைவ் சாட்டில் கூறுவார் என அறிவித்திருந்தது. அதன்படி இன்று அந்த அணியின் கேபடனாக தமிழகத்தை சேர்ந்த அஸ்வினை தேர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அஸ்வின் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்தாலும் தனக்கான ஒருநாள், மட்டும் T20 அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். ஆதலால் இந்த தலைமை பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய ஒருநாள் மற்றும் T 20 அணியில் இடம்பெற சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.