தென் சீன கடலின் பகுதிகளை எல்லாம் தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் சீனாவுக்கு ஆசியான்( ASEAN) கடும் கண்டனத்தையும் சீனாவிற்கு எதிராக ஒட்டு மொத்த ஆதங்க எதிப்பையும் தெரிவித்துள்ளது.
தென் சீன கடலின் பெரும்பகுதியை எல்லாம் ஆக்கிரமித்துள்ள சீனாவிற்கு ‘ஆசியான்’ எனப்படுகின்ற தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பு தனது கண்டனத்தை கடும் எதிர்ப்பாக தெரிவித்துள்ளது
கடந்த, 1982ல் உருவாக்கப்பட்ட ஐ.நா சபையின் சட்டத்தின்படியே, கடல் எல்லையை நிர்ணயிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ள நிலையில் சீனாவோ நிலப்பரப்புகளை ஒரு பக்கம் ஆக்கிரமித்து வருகிறது.நீர் பரப்பபையும் விட்டு வைக்காத சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியிலும், ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. பழைய வரலாற்றை காண்பித்து, தென் சீனக் கடலின் பெரும்பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அக் கடல் பகுதியில் உள்ள பல பவளப் பாறைகள், சிறிய தீவுகளை எல்லாம் சீனா ஆக்கிரமித்து, அங்கு தன் படைகளை நிறுத்தி வைத்தும் விட்டது. இந்த அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா பதம் பார்த்தே வருகிறது. இந்நிலையில், ஆசியான் எனப்படும் தெற்காசிய நாடுகள் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கூட்டம், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக நேற்று நடைபெற்றது. இந்த அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதன் பின் ஆசியான் வெளியிடப்பட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வதேச கடல் எல்லைகளில் மீன் பிடிப்பது, எண்ணெய் வளங்களை பயன்படுத்திக் கொள்வது உட்பட, நாடுகளுக்கு உடனான கடல் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த, 1982ல் ஐ.நாவின் கடல் சட்ட ஒப்பந்தத்தில் இது தொடர்பாக தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படியே, தென் சீனக் கடலிலும், அதன் எல்லைகளும் வரையறுக்கப்பட வேண்டும்.என்று சீனாவின் பழைய வரைபடங்கள் எடுபடாது என்று சூசகமாக தெரிவித்துள்ள இவ்வமைப்பு இது குறித்து கடுமையன தனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…