உலகம் சுற்றும் குளுகுளு வாலிபனாக சந்தானம்.! இந்த லூக்க எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே.!?
நடிகர் சந்தானம் தற்போது மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் ‘லொள்ளு சபா’ சேசு டி.எஸ்.ஆர்பிபின், கவி, ஹரிஷ் யுவராஜ் மௌரி தாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்ட்டர் தற்போது டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு “குலுகுலு” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
மோஷன் போஸ்டர் ரசிகர்களுக்கு பிடித்தவாறு இருக்கிறது. ஆம் , அந்த அளவுக்கு வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக தலைப்பு எப்படி வந்தது என்பதற்கான பின்னணி கதை… சத்தமாக சிரிப்பது மற்றும் “மிசாட்வென்ச்சர்ஸ் ஆஃப் எ டிராவல் ஜன்கி” என்ற டேக் லைன். இது அனைத்தும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. விரைவில் படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.
The hilarious motion poster of @iamsanthanam‘s next ! ????
Here comes #GuluGulu ????➡️ https://t.co/EipydIQI7i@MrRathna @Music_Santhosh @KVijayKartik @rajnarayanan_ @circleboxE #GuluGuluMotionPoster pic.twitter.com/wWt9Jf3IWS
— Sony Music South (@SonyMusicSouth) March 16, 2022
ஆனால் போஸ்டரில் நடிகர் சந்தானம் அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரா கொண்டா இருப்பது போல் இருக்கிறார். இதுவரை இல்லாத விதமாக விதியசமான கெட்டப்பில் நடிகர் சந்தானம் இருக்கிறார்.