ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், கருணாகரன்,சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் .
டி.இமான் இசையமைத்துள்ள இந்த படமானது காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தினை நேரடியாக ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியிட உள்ளதாக வெளியான தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.இந்த நிலையில் தற்போது டெடி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள டெடி படத்தினை மார்ச் 19-ம் தேதி ஹாட்ஸ்டாரில்வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…