மீண்டும் “டெடி” இயக்குனருடன் இணையும் ஆர்யா..!
நடிகர் ஆர்யா அடுத்ததாக மீண்டும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் டெடி. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் மகிழ்திருமேனி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கான டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் 19ஆம் தேதி ஓடிடி இணையத்தளமான ஹாட்ஸ்டார் இணையதளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் நடிகர் ஆர்யா இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த திரைப்படத்திற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ஆர்யா எனிமி படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.