அருண் விஜயின் 33-வது படத்தின் முதல்பார்வை நாளை வெளியீடு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷுட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்திற்கு தற்காலிகமாக AV33 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் தலைப்பு முதல் பார்வையுடன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9 -ஆம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யாவும், இயக்குனர் பா ரஞ்சித்தும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீடவுள்ளார்கள்.
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…