சூர்யாவுடன் இணையும் ஆர்யா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் மற்றோரு நடிகராக ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது பிதாமகன் படத்தை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா படத்தை இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பாலா இயக்கும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும், படத்தில் மற்றோரு நடிகராக ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.