நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா கர்ப்பமாக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்யா, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் மகாமுனி வெற்றியை தொடர்ந்து தற்போது டெடி என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார். இந்த படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதனையடுத்து ஆர்யா, சுந்தர் சி இயக்கும் அரண்மனை – 3 படத்திலும், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சல்பேட்டா’ என்னும் படத்தில் பாக்ஸராகவும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஆர்யா அப்பாவாக போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் நடிகையான சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். சாயிஷா தற்போது ஆர்யாவுடன் டெடி படத்திலும், பவன் கல்யாணுடன் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து சாயிஷாவோ, ஆர்யாவோ எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…