நல்ல கதையம்சங்கள் உடைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்ததோடு, சாலை விதிகளை மதிப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பாராட்டை பெற்றது.
தற்போது சித்தார்த் அடுத்ததாக அருவம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கேத்தரின் தெராசா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தினை சாய் சேகர் இயக்கியுள்ளார்.S.S.தமன் இசையமைத்துள்ளார். ட்ரெண்டியன்ட் ஆர்ட்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்பட ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் உணவு கலப்படம் பற்றி படம் தீவிரமாக பேசுயுள்ளது என தெளிவாக தெரிகிறது. ‘ஆண்டவன் படைச்ச உயிருக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறது.’ ‘சாப்பாட்டு பொருள்களை கலப்படம் பண்ணாதீங்கனு சொன்னா அது தப்பா’ ‘ கேன்சர் என்பது வியாதி இல்லை அது வியாபாரம்’ என ஒவ்வொரு வசனமும் ஆழமான கருத்து நிறைந்ததாக இருக்கிறது. இந்த ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…