17கோடி பட்ஜெட்டில் ஹரியுடன் கூட்டணி அமைக்கும் அருண்விஜய்.! தயாரிப்பாளர் யார் தெரியுமா.?
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏவிஎம் ரத்னம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாக்ஸர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் மாஸ் ஆக்ஷன் படங்களை இயக்கும் முன்னணி இயக்குனரான ஹரி இயக்கும் கிராமத்து சப்ஜெக்ட் ஒன்றில் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. ஹரி அவர்கள் சூர்யாவின் அருவா படத்திற்கு முன்பு அருண்விஜய்யை வைத்து படத்தை எடுத்து முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்காக 17கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏவிஎம் ரத்னம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.