மாஞ்சாவேலு கெட்டப்பில் மாஸ் காட்டும் அருண்விஜய்.! சினம் படத்தின் அப்டேட்டை கூறிய ஹீரோ.!
அருண்விஜய்யின் சினம் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
நடிகர் அருண் விஜய், மாபியா படத்தை அடுத்து தற்போது வா டீல் , அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத், பாஸ்கர் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே 2ல் நடிக்க போவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது அருண் விஜய்யின் 30வது படமான சினம் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளார். ஜி. என். ஆர். குமாரவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலக் லால்வாணி அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைப்பெற்றது. பெரிய மீசையுடன் வெள்ளை வேட்டி சட்டையில் கெத்தான தோற்றத்தில் உள்ள அருண் விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
With the blessings of God, started dubbing for our film #Sinam today!! @MSPLProductions @gnr_kumaravelan @ShabirMusic @gopinathdop @silvastunt @DoneChannel1 @knackstudios_ pic.twitter.com/VZd6wSA1RT
— ArunVijay (@arunvijayno1) August 3, 2020