அருண் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்த படம்.! பிரபல இயக்குநரின் டூவிட்.!
செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அருண் விஜய், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர். கடந்தாண்டு இவர் நடிப்பில் குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் போன்ற வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.சமீபத்தில்வெளியான கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் சேரன் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான படம் பாண்டவர் பூமி. இது குறித்து இயக்குநர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படமே என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம். இன்னும் நெடுந்தூரம் படங்கள். பார்த்து ரசிக்கிறேன்.
நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி நன்றி என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த இருண்ட விஜய், என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல் – பாண்டவர்பூமி. அதன்மூலம் பல நுணுக்கங்களை எனக்கு கற்றுக் கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவர்களின் இந்த டுவிட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி..????
செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!! https://t.co/tbE3BPoayz— ArunVijay (@arunvijayno1) May 27, 2020