அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அறிவிப்பில் படக்குழுவினர் மீது கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது.
அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்பட வில்லை. அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக அருண் விஜய் வெளிநாடுகளில் சென்று தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார்.
சமீபத்தில் அருண் விஜய் அளித்த பேட்டியில், தயாரிப்பு தரப்பில் இருந்து ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே படம் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பாக்ஸர் படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனையடுத்து அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் எல்லோரும் பாக்ஸர் படத்தினை குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக உங்களை போலவே நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த படத்திற்காக என்னை தயார்ப்படுத்தி கொள்ள கடினமாக உழைத்து வந்தேன். ஆனால் இன்னும் முழு அளவிலான படப்பிடிப்பை தொடங்கவில்லை. இந்த திரைப்படத்திற்கு உடல் மற்றும் மனதளவில் அதிக முயற்சியும், உழைப்பும் தேவை என்பதால், அது சரியான காலகட்டத்தில் வேலை செய்யப்பட வேண்டும். அது தயாரிப்பு நிறுவனத்தின் தெளிவான அறிவிப்பால் மட்டுமே சாத்தியமாகும். எனவே எனது தரப்பில் இருந்து இந்த படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருங்கள் என்று கூறியுள்ளார்.இதிலிருந்து பாக்ஸர் படக்குழுவினர் மீது அருண்விஜய் சற்று கோவமாகவே உள்ளார் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பிற்காக அருண் விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…