தனது 31 வது படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய அருண் விஜய்..!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் AV31 படத்திற்கான டப்பிங் பணிகள் நேற்று தொடங்கியுள்ளது.
நடிகர் அருண் விஜய் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். All in Pictures சார்பில் தயாரிப்பாளர் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் உறவு சம்மந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்டெபி படேல் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்திற்கான டப்பிங் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. மேலும் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது டப்பிங் பணியை தொடங்கியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில், டீஸர் ட, ரெய்லர் என விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Started my dubbing for #AV31 today!! Aiming to bring this to you’ll as a treat in theatres this summer…????@dirarivazhagan @ReginaCassandra @stefyPatel #VijayaRaghavendra @All_In_Pictures @SamCSmusic @doprajasekhar @editorsabu @DoneChannel1 @proyuvraaj @viwinsr pic.twitter.com/NU0nUkgoJY
— ArunVijay (@arunvijayno1) February 22, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025