அருள்நிதியின் அடுத்த திரைப்படம் “D பிளாக்”.. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!
யூடியூப் குழுவின் விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள “D பிளாக்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.
யூ-டியூப்பில் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி தனது 15-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் குமார் ராஜேந்திரன் ஆதியுடன் நட்பே துணை, நான் சிரித்தாள், ஆகிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனராக களமிறங்குகிறார்.
இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, சமீபத்தில் திரையுலகினருக்கு போட்டு காட்டப்பட்டது. படத்தின் கதை அருமையாக இருந்ததால் இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியீடப்பட்டுள்ளது. படத்திற்கு “D பிளாக்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கையில், படம் மிகவும் த்ரில்லர் கலந்த கதையாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ரான் எத்தன் இசையமைக்கிறார் சண்டை இயக்குனராக பிரதீப் தினேஷ் பணியாற்றுகிறார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#DBlock #DBlockFirstLook @VijayKRajendran @SakthiFilmFctry @sakthivelan_b @MNM_Films @AravinndSingh @Avantika_mish @RonYohann @thecutsmaker @DoneChannel1 pic.twitter.com/FlO0GnXEnh
— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 21, 2021