#Breaking: ஆப்கானில் விமான விபத்து ! 83 பயணிகளின் நிலை என்ன ?
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அரியானா ஏர் லைன்ஸ் (Ariana Airlines) சொந்தமான போயிங் (BOEING 737-400) என்ற பயணிகள் விமானம் பயணித்து கொண்டிருந்தபோது கஸ்னி மாகாணத்தின் தேஹ் மாவட்டத்தில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.ஆப்கான் நேரப்படி 1.30 விழுந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 83 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.விமானம் விபத்துக்குள்ளான இடமானது தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பாங்கான இடம் ஆகும்.அரியானா ஏர் லைன்ஸ் (Ariana Airlines) ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான விமானம் ஆகும்.