தற்பொழுது நிறைவடைந்துள்ள பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னராகிய நடிகர் ஆரி வெளியில் வந்த கையோடு இயக்குனரின் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் போலீசாக நடிக்கிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் நிறைவு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகர் ஆரி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு அந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வந்திருந்தார். பல கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த கையோடு அபின் எனும் இயக்குனரின் இயக்கத்தில் உருவாகக் கூடிய ஒரு புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.
வித்யா பிரதீப் அவர்கள் கதாநாயகியாக இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் ஆரி அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான பூஜையில் இயக்குனர் முருகதாஸ் அவர்கள் பங்கேற்று துவக்கி வைத்துள்ளார். ஏற்கனவே ஆரி நடிப்பில் அலேகா, பகவான் ஆகியவை உருவாகி வரும் நிலையில் இவை இறுதி கட்டத்தை எட்டி விட்டது எனவும் விரைவில் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…