இந்த புத்தாண்டு முதல் தனது பெயரை மாற்றிக் கொண்ட ஆரி.!

- நடிகர் ஆரி “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
- இந்த புத்தாண்டு முதல் “ஆரி” என்ற தனது பெயரை “ஆரி அருஜூனா” என மாற்றி உள்ளார்.
நடிகர் ஆரி தமிழ் சினிமாவில் “ஆடும் கூத்து “திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான “நெடுஞ்சாலை” திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
நடிகர் ஆரி இப்படத்தை தொடர்ந்து தரணி, மாயா, உன்னோடு கா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” திரைப்படம் உருவாகி வருகிறது.
வணக்கம் இந்த புத்தாண்டு முதல்
எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன் எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியைவெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அருஜுனா @Aariarujunaஎன்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் pic.twitter.com/NDau1CfQML— Aari Arujuna (@Aariarujuna) December 30, 2019
தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஆரி ஒருவர்.இந்நிலையில் “இந்த புத்தாண்டு முதல் “ஆரி” என்ற தனது பெயரை “ஆரி அருஜூனா” என மாற்றி உள்ளார். இனி வரும் காலங்களில் தன்னை ஆரி அருஜூனா என அழைக்குமாறு கேட்டு கொண்டு உள்ளார்.