விஜய் தொலைக்காட்சிக்கும், பிக்பாஸ் சீசன் 5 தேர்வு குழுவுக்கு பாராட்டு தெரிவித்த ஆரி அர்ஜுனன்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி கடந்த 3-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள்.
இந்த பிக்பாஸ் சீசன் 5-ல் முதலாவதாக கானா பாடகி இசை வாணியும், இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் ராஜுவும், மூன்றாவதாக மாடல் மதுமிதாவும், நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக்கும், ஐந்தாவது போட்டியாளராக மாடலும், நடிகையுமாகிய திருநங்கை நமீதா அவர்களும், ஆறாவது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவர்களும், ஏழாவது போட்டியாளராக ஜெமினி கணேசனின் பேரன் அபினை அவர்களும், எட்டாவது போட்டியாளராக நடிகை பவானி ரெட்டி அவர்களும், ஒன்பதாவது போட்டியாளராக நாட்டுப்புற கலைஞர் சின்ன பொண்ணு அவர்களும், பத்தாவது போட்டியாளராக மாடல் அழகி நதியாவும் களமிறங்கினர்.
அதனை தொடர்ந்து, பதினோராவது போட்டியாளராக நடிகர் வருண், 12 வது போட்டியாளராக தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமாகிய இமான் அண்ணாச்சியும், 13 வது போட்டியாளராக மாடல் ஸ்ருதியும், 14 வது போட்டியாளராக மாடல் அழகி அக்ஷராவும், 15 வது போட்டியாளராக ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரியும், 16 வது போட்டியாளராக நாடக கலைஞர் தமிழ் செல்வியும், 17வது போட்டியாளராக மாஸ்டர் படத்தில் விஜயின் மாணவராக நடித்த சிபி சந்திரனும், 18வது போட்டியாளராக நடிகர் நிரூப் நந்தகுமார் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த 18 போட்டியாளர்களின் ஒரே ஒரு திருநங்கை போட்டியாளர் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்து, பிக்பாஸ் சீசன்-4 டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாலினம் – ஆண், பெண்ணுக்கு மட்டுமானது அல்ல மூன்றாம் பாலினத்தவருக்கும் உரியது என்பதை உணர்ந்து – மேடை ஏற்றி வாய்ப்பை உருவாக்கிய விஜய் தொலைக்காட்சிக்கும், பிக்பாஸ் சீசன் 5-ன் தேர்வு குழுவிற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…