நடப்பாண்டில் அர்ஜென்டினாவின் ஜிடிபி 12 % வீழ்ச்சியடையும்-மத்திய வங்கி கணிப்பு.! 

Default Image

கொரோனா வைரஸ்  காரணமாக 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% வீழ்ச்சியடையும் என்று மத்திய வங்கி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% குறைய வாய்ப்புள்ளது என  அந்நாட்டு மத்திய வங்கி பொருளாதார வல்லுநர்களின் கணக்கெடுப்பின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா மத்திய வங்கி  நிபுணர்கள் நேற்று வெளியிட்ட ஆய்வில், முந்தைய மாதம் மதிப்பிடப்பட்ட ஜிடிபி 12.5% உடன் இந்த கணிப்பு ஒப்பிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

முன்னர் இரண்டாவது காலாண்டில் கணக்கிடப்பட்ட 17% இலிருந்து பொருளாதாரம்  16.6% குறைந்தது, மூன்றாம் காலாண்டில் இது முன்னர் எதிர்பார்க்கப்பட்ட 8% உடன் ஒப்பிடும்போது 8.7% வளர்ச்சியைக் கண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அர்ஜென்டினாவில் 451,198 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,468 உயிரிழப்பு பதிவாகியுள்ளன. தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினாவில்  சுமார் 45 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்