என்னோட குழந்தைக்கு உடல் எடை அதிகரிக்கவே மாட்டிக்கிது கவலைபடுகிறீர்களா….!!! இனிமேல் இந்த உணவுகளை கொடுத்து பாருங்க….!!!
குழந்தைகளை பொறுத்தவரையில் 5 மாதங்கள் வரை ஓரளவுக்கு உடல் எடை குறையாமல் தான் இருப்பார்கள். அதன்பின் படி படியாக குழந்தைகளின் உடல் எடை குறைந்து கொண்டே போகும். இந்த கவலை அனைத்து தாய்மார்களுக்கும் உண்டு. பல வழிகளில் போராடியும் எனது குழந்தைக்கு இன்னும் உடல் எடை அதிகரிக்கவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா…? இனிமேல் இருந்து இதை பின்பற்றி பாருங்கள்.
வெண்ணெய் நிறைந்த உணவு பொருட்கள் :
வெண்ணெயில் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ளது. இதில் அதிகமான கொழுப்பு உள்ளதால், வெண்ணெய் நிறைந்த உணவு பொருட்களை கொடுக்கும் போது குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்கும்.
கடலை எண்ணெய் :
கடலை எண்ணெயில் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ளது. இதில் புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளதால், கடலை எண்ணெயை பயன்படுத்தி உணவுகள் செய்து கொடுத்தால் உடல் எடை அதிகரிக்கும்.
முட்டை :
முட்டையில் அதிகமாக புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் உள்ளது. இதை குழந்தைகளின் உணவில் சேர்த்து கொள்ளும் போது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், உடல் எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.
பால் :
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகமான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க உதவுவதோடு, குழந்தைகள் அதிகமான ஆற்றலுடன் செயல்படுவதற்கும் உதவுகிறது.
வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஆற்றல் அதிகமாகவே உள்ளது. இதில் உடல் வளர்ச்சியை அதிகரிக்க செய்ய கூடிய உட்பொருட்கள் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளது. மற்றும் இதில் அத்தியாவசியமான கார்போஹைட்ரேட்கள் அதிகமாக உள்ளது.
பாஸ்தா மற்றும் ஆலிவ் ஆயில் :
பாஸ்தாவை ஆலிவ் ஆயிலில் போட்டு சமைத்து கொடுத்தல், சுவையாக இருப்பதோடு, உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது.