கணினியில் வேலை பார்ப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்!

Default Image

தற்பொழுதுள்ள காலகட்டத்தில் கம்ப்யூட்டர் இல்லாத இடமே இல்லை. அரசு அலுவலகம் முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்படுகிறது. அப்பேர்ப்பட்ட கணினியில் அதிக நேரம் செலவழிப்பவர்களா நீங்கள்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.

1.முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்கள் பாதிப்படைய வாய்ப்புகள் நிறைய உண்டு. இதனை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.

2. தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள் ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கு ஒருமுறை உங்களது மற்றும் கால்களை நீட்டி மற்றும் மடக்கிக் கொள்வது நல்லது. மேலும், ஒவொரு ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை சேரில் இருந்து எழுந்து ரிலாக்ஸ் செய்வது நல்லது.

3. கி-போடில் டைப் செய்யும் பொழுது முழங்கைகள் இடைப் பக்கத்தில் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் அது தோள்பட்டையில் ஏற்படும் வலிகளை குறைக்க உதவும்.

4. கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் உபயோகிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அது நமது கண்களை பாதுகாக்கும்.

5. கழுத்தை குனாமல் இருப்பது மிக நல்லது. ஏனெனில் இது கழுத்தில் ஏற்படும் வழிகளை குறைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்