ஏசி அறையில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்…? அப்ப கண்டிப்பா இதை படிங்க…!
இன்றைய நவீன மயமான உலகில் பொதுவாக அதிகமானோர் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் தான் வேலை செய்கிறோம். இது நமக்கு வியர்வை தொல்லை மற்றும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய சில பிரச்சனைகளை தவிர்த்தாலும், நமது உடலில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில் ஏசி அறையில் இருந்து வேலைபார்பவர்களுக்கு என்னென்ன பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
தலைவலி
நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஏ.சி.யில் அமர்ந்திருப்பவர்கள் சைனஸ் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்கள். ஏசியின் வெப்பநிலை அதிகரித்தாலோ அல்லது குறைந்துவிட்டாலோ நீங்கள் தலைவலி மற்றும் எரிச்சலை உணரலாம்.
காய்ச்சல்
ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதால் சோர்வு ஏற்படலாம். நீங்கள் ஏ.சி.யை விட்டுவிட்டு சாதாரண வெப்பநிலை அல்லது வெப்பமான இடத்திற்குச் சென்றால், நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்படலாம். ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதன் மூலம், காய்ச்சல், குளிர், சளி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகலாம்.
கண் பிரச்சனை
ஏ.சி.யில் உட்கார்ந்திருப்பது கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது கண்களில் அரிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இது வெண்படல பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது. கண்கள் சிவத்தல், எரித்தல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்த கூடும்.
தோல் வறட்சி
ஏ.சி.யில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்துகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை முற்றிலுமாக வற்றி போக பண்ணுகிறது.
உடல் எடை
ஏசியின் பயன்பாடு நம் உடலின் கொழுப்பை அதிகரிக்கிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், குளிர்ந்த இடத்தில் உட்கார்ந்து கொள்வதன் மூலம் நம் உடலின் ஆற்றல் தீர்ந்துவிடாது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது இது உடல் பருமனை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய காரணமாக அமைகிறது.