விக்ரம் படத்தில் நான் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
இதனை தொடர்ந்து இதற்கு நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க என்ன அணுகினார்கள். ஆனால் நான் நடிப்பது உறுதியாகவில்லை. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. நான் நடிப்பது உறுதியானால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்றும் கூறியுள்ளார்.
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…