கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் அவரது பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு துப்புரவு செய்யும் கருவியை மாற்ற வேண்டும்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் பலர் மீண்டும் தங்களுக்கு தொற்று பரவாது என்று நம்பி, பலவிதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், தடுப்பூசிகள் ஒரு தடுப்பு நடவடிக்கைக்காக பயன்பட்டாலும் எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் 100 சதவீத பாதுகாப்பை அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த நோயால் இன்னும் பாதிக்கப்படாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா ஆக்சிஜன் பற்றாக்குறை நெருக்கடியை சந்திப்பதோடு, பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இதுகுறித்து, டாக்டர் பிரவேஷ் மெஹ்ரா கூறுகையில், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர் வட்டாரத்தில் யாராவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து இருந்தால், தயவு செய்து அவர்கள் பல் துலக்கும் பிரஷ், நாக்கை துப்புரவு செய்யும் கருவி போன்றவற்றை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து டாக்டர் பூமிகா மதன் கூறுகையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் தங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிந்து கொண்ட 20 நாட்களுக்குப் பின், பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு சுத்தப்படுத்தும் கருவியை மாற்ற வேண்டும். இதனை மீண்டும் பயன்படுத்தினால் இது சுவாசக் குழாய்களில், அதாவது நமது வாய் வழியாக வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்கி சுவாச பாதை நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறு பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு துப்புரவு செய்யும் கருவிகளை மாற்றும்போது வாய் வழியாக வைரஸ் பாக்டீரியாக்களை உருவாவதை தடுக்கலாம். இவர்கள் மவுத்வாஷ் அல்லது சூடான உப்பு நீரை வைத்து வாயை சுத்தம் செய்வது சிறந்தது என்றும், ஒரு நாளைக்கு வாய்வழி சுகாதாரத்தை இரண்டு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பாதிக்கப்பட்ட நபரின் பல் துலக்கும் பிரஷ் மற்றும் நாக்கு சுத்தம் செய்யும் கருவியில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க நாட்களுக்கு தங்கி இருக்க வாய்ப்புள்ளது. எனவே இது மீண்டும் உங்களுக்கு தொற்றை ஏற்படுத்தலாம். மேலும் உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கும் அதன் பாதிப்பை கொண்டு வரலாம். எனவே நீங்கள் பல்துலக்கும் கருவி மற்றும் நான்கு துப்புரவு செய்யும் கருவியை மாற்றுவது மிகவும் நல்லது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…