நெஞ்சு சளியால் மிகவும் அவதி படுகிறீர்களா ! இந்த பாட்டி வைத்தியத்தை உடனே செய்யுங்க !
சளி பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை எளிதில் தாக்க கூடிய நோய்.இதற்காக நாம் ஆங்கில மருந்தை எடுத்து வந்தாலும் அது நமக்கு நிரந்தர தீர்வை கொடுக்காது.
முந்தைய காலத்தில் பாட்டிகள் எளியதாக வீட்டு இருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி சில மருத்துவ முறைகளை கையாண்டார்கள். இந்த முறைகளை கையாண்டால் அது ஒரு வாரத்தில் நமது நோயை நீக்கி விடும்.
மேலும் நாம் ஆங்கில மருதை எடுக்கும் போது உடனடி தேர்வு கிடைத்தாலும் சளி முழுமையாக நமது உடலில் இருந்து வெளியேறுவதில்லை.
இந்த பதிப்பில் சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி சளிதொல்லையில் இருந்து எவ்வாறு வெளியேறலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
எலுமிச்சை :
எலுமிச்சை பழத்தை எடுத்து சாறு பிழிந்து வெதுவெதுப்பான நீரில் அதனுடன் தேன் கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நாளடைவில் குணமாகும்.
எலுமிச்சை பழத்தில் விட்டமின் சி இருப்பதால அது நமது உடலில் நோய் எதிர்ப்பது சக்தியை அதிக படுத்துகிறது.
துளசி :
துளசி மற்றும் கற்பூரவல்லி இலைகளை சேர்த்து 2 கப் நீரில் நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த தண்ணீர் 1/2 கப்பாக வரும் வரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது இருமல் மூலம் சளியை விரைவில் சளியை உடம்பில் இருந்து வெளியேற்றி விடும்.