தலையணை வைத்து உறங்குபவரா நீங்கள்…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!
தலையணை வைத்து உறங்குவதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது.
இன்று நாம் அனைவரும் உறங்க வேண்டும் என்றாலே தலையணையை தான் தேடுகிறோம். ஆனால், தலையணை இல்லாமல் உறங்குபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, நமது களைப்பை போக்க மிகவும் ஆரோக்கியமான முறையில் உறங்குவது மிகவும் அவசியமாகும்.
அந்த வகையில், தலையணை வைத்து உறங்குவது என்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அது ஒரு மரபாகவே மாறிவிட்ட நிலையில், அதிலும் சிலர் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து தூங்குவது உண்டு. மேலும் காலுக்கு ஒரு தலையணை, காலுக்கு அருகில் ஒரு தலையணை என தூங்க சென்றாலே பல தலையணைகளை பயன்படுத்தி உறங்குபவர்கள் உள்ளனர்.
தலையணையின்றி உறங்குபவர்கள்
தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு, தண்டுவடம் அதன் இயல்பான நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் உடல் வலி, தண்டுவட பிரச்சனைகள் ஏற்படாது. தலையணை இல்லாமல் தூங்கினால் உடலின் எலும்பு நிலை சீராக இருக்கும். மேலும் முகத்தில் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது.
தலையணை வைத்து உறங்குபவர்கள்
உயரமான தலையணை பயன்படுத்துபவர்களுக்கு பல்வேறு உடல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். தண்டுவடம் மற்றும் கழுத்து தோள்பட்டை சம்பந்தமான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
தலையணையை எப்படி பயன்படுத்த வேண்டும்…?
ஒரு சாய்த்து உறங்குபவர்கள் அடர்த்தியான தலையணை வைத்து படுப்பது நல்லது இப்படி படுத்தால் தோள்பட்டை காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும். அதேசமயம் குப்புறப்படுத்துக் உறங்குபவர்கள் தட்டையான தலையணையை பயன்படுத்துவது நல்லது. இது முதுகு மற்றும் இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட தலையாணை இல்லாத உறக்கம் தான் மிகவும் சிறந்ததும், உடலுக்கு ஆரோக்கியத்திற்கு சிறந்ததும் கூட.