கர்ப்பிணிகளுக்கு கால் வலி ஏற்படுவது சாதாரணமான ஒரு விஷயம் தான். ஆனால் கால் வலியால் அவதிப்பட கூடிய கர்ப்பிணிகள் இயற்கை முறையில் சில உடற்பயிற்சிகள், ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது அவற்றை சரி செய்யலாம். அவை குறித்து அறியலாம் வாருங்கள்.
கருவில் வளர தொடங்கக்கூடிய நமது சிசு நமக்கு பாரமாக தெரியப்போவதில்லை. ஆனால் அந்த சிசுவை நாம் சுமப்பதனால் நமது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் சில நமக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் புரதச் சத்து அடங்கிய உணவை அதிகம் சாப்பிடுவதால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நன்கு வலுப்பெறும். இதற்கு பீன்ஸ் முக்கியமாக பயன்படுகிறது. அத்துடன் கோழி, மீன், முட்டை, பால், தயிர் ஆகியவையும் அதிகம் பயன்படுகிறது. கால்சியமும் முதல் மூன்று மாதத்தில் அதிகம் தேவைப்படுகிறது. இதுதான் உங்கள் குழந்தையின் எலும்புகளை வலுவாக மாற்றுவதற்கும் உதவுகிறது. பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்திலுமே அதிகம் கால்சியம் காணப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் உடல் எடை அதிகரிப்பது வழக்கம் தான்.
இதன் காரணமாக மூட்டு, முதுகு பகுதிகளில் அதிக வலி ஏற்படும். அதிலும் கால் வலி என்பது பலருக்கும் மிகக் கொடூரமான ஒரு வலியாக காணப்படும். இதனை தடுப்பதற்கு சில உடற்பயிற்சிகளையும் ஊட்டச்சத்துக்களையும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். உடற்பயிற்சிகள் மிக கடினமானதாக இருக்க வேண்டாம்.ஆனால் இடுப்பு எலும்புகள் தசைகள் மற்றும் உடல் தசைகளுக்கு இதமானதாக கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோல 20 நிமிடங்களாவது தினமும் நடைப் பயிற்சி செய்வதாலும் கால்வலி தவிர்க்கப்படும். மேலும் கால்சியம் சத்து குறைவாக இருப்பதாலும் கால் வலி மற்றும் கால் வீக்கங்கள ஏற்படும். எனவே செறிவூட்டப்பட்ட உணவுகளை தரம் பார்த்து வாங்கி சாப்பிடுவது அவசியம். தானியங்கள், சோயா ஆகியவற்றில் அதிக அளவு கால்சியம் சத்து காணப்படுகிறது. இது போன்ற சில மருத்துவ நன்மைகள் நிறைந்தவற்றை பயன்படுத்தி இயற்கையாகவே நீங்கள் உங்கள் உடலைப் பராமரித்து வலிகளில் இருந்து பாதுகாக்கலாம்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…