அடுத்த ஆண்டில் ஜாவா வாங்கும் திட்டத்தில் இருக்கின்றீர்களா?? உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி!

Default Image

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜாவா நிறுவனம், தனது ஜாவா 42, ஜாவா கிளாஸிக் மற்றும் ஜாவா பெராக் ஆகிய பைக்குகளின் விலையை உயர்த்தவுள்ளது.

செக்கோஸ்லோவாக்கியா (Czechoslovakia) நாட்டை தலைமையாக கொண்ட ஜாவா பைக் நிறுவனம், இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக ஜாவா பெராக், இளைஞர்களை அதிகளவில் கவர்ந்தது. இந்த ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, பெனெல்லி இம்பீரியல் உள்ளிட்ட பைக்குகள் இருந்து வருகிறது.

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், ஜாவா மோட்டார் சைக்கிள் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் ஜாவா நிறுவனம், தனது ஜாவா 42, ஜாவா கிளாஸிக் மற்றும் ஜாவா பெராக் என மொத்தம் 3 வகையான பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

jawa specs

2018 ஆம் ஆண்டில் ஜாவா க்ளாஸிக் ரூ.1.73 லட்சம் முதல் -1.83 லட்சம் வரையிலும், ஜாவா 42 ரூ. 1.60 லட்சம் முதல் 1.74 லட்சம் வரையிலும், அறிமுகமானது. அதனைதொடர்ந்து 2019 ஆம் ஆண்டு முதல் ஜாவா பெராக், ரூ. 1.94 லட்சத்திற்கு அறிமுகமானது. இந்நிலையில், இந்த மூன்று பைக்குகள் விலையை உயர்த்தவுள்ளதாக ஜாவா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் எள்ளளவு விலை உயரவுள்ளது என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்