மன்சூர் அலிகானை பற்றி பேச நீங்க ஒழுக்கமா? சிரஞ்சீவியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

Mansoor Ali Khan - Chiranjeevi

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சமீபத்தில் கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா மோகன், மாளவிகா மோகனன், சின்மயி, குஷ்பூ என பல பிரபலங்கள்  தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.

அந்த வகையில், நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை தரக்குறைவாக பேசியதற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்பொழுது, மன்சூர் அலிக்கானுக்கு எதிரா பேசுறீங்கள….நீங்க முதலில் ஒழுங்கா? என்று நெட்டிசன்கள் சிரஞ்சீவி தொடர்பான சில விடீயோக்களை வெளியிட்டு வச்சி செய்து வருகிறார்கள்.

அதாவது, பொதுவெளி மற்றும் விழாக்களில் சிரஞ்சீவி சக நடிகைகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட செயலை நெட்டிசன்கள் சுற்றி காட்டி வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர். அண்மையில், , நடிகை தமன்னாவின் உடல் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்…நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்?

அதேபோல், ஒரு பட விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை பூஜா ஹெக்டேவிடமும் அத்துமீறி நடந்துக்கொண்டார் என கூறி சில வீடியோக்களை பதிவிட்டு மன்சூர் அலிகான் பற்றி பேசுவதற்கு நீங்க ஒழுக்கமாக என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு…விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா? – சீமான் கருத்து.!

சிரஞ்சீவி கருத்து

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவைப் பற்றி கூறிய சில கண்டிக்கத்தக்க பேசியதை அறிந்தேன். இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அல்லது பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும், அருவருப்பானதாக  இருக்கிறது.

அத்தகைய கருத்துகளுக்கு கடுமையான பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். நான் த்ரிஷா மற்றும் இதுபோன்ற கொடூரமான கருத்துகளுக்கு ஆளாக வேண்டிய ஒவ்வொரு பெண்ணுடனும் நிற்கிறேன் என்று நடிகர் சிரஞ்சீவி கருத்து தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்