பச்சைமிளகாய் சாப்பிட்டால் செரிமானம் ஆகுமா…? அட… இவ்வளவு நாளா தெரியாம போச்சே…!!!
பச்சை மிளகாய் என்றாலே காரம் என்று அனைவரும் எண்ணுவதுண்டு. காரமாய் இருந்தாலும், அதில் பல சத்துக்களும், மருத்துவ பயன்களும் உண்டு. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அளிப்பதோடு, பல நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றலும் கொண்டது.
பச்சை மிளகாயில் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் கலோரிகளே இல்லாமல் நமக்கு கிடைக்கிறது. மிளகாயில் கலோரிகளே கிடையாது. அதனால் உடல் எடையை குறைக்க நீங்களே டயட்டில் இருக்கும் கூட இதனை பயன்படுத்தலாம்.
உணவு செரிமானம் :
பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும்.
பச்சை மிளகாயில் வைட்டமின் சி, ஏ, கே சத்துக்கள் உள்ளது. உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது :
பச்சை மிளகாய் உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
பச்சை மிளகாயில் ஆண்டி – பாகாடீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது. அதிலும் முக்கியமாக சரும தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.