முழுவதும் சைவ உணவுகளை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள், எலும்பு முறிவை அதிகளவில் சந்திக்க நேரிடும் என புதியதாக ஒரு ஆய்வின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சைவ உணவுகளான காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆரோக்கியமானதாக கருதப்படுவதுடன் அசைவம் சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் தான் நோயின்றி வாழ்வதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் நமது சிந்தனையை முழுவதும் பொய்யாக்கும் வகையில் தற்பொழுது ஒரு ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சைவ உணவுகள் ஆரோக்கியமாக கருதப்பட்டாலும், முழுவதும் சைவம் மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவுகள் மூலமாக கிடைக்கக்கூடிய கால்சியம், வைட்டமின் பி12, துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற சைவ உணவுகளை சாப்பிட மறுக்கக் கூடிய சைவ பிரியர்கள் எலும்பு முறிவை சந்திக்கக்கூடிய அபாயத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுபவர்கள் மீன் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை வெறுப்பவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. சைவ உணவில் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் புரதங்கள் பெறப்படாததால் இறைச்சி உணவு சாப்பிடுபவர்களை ஒப்பிடும்போது இறைச்சி அல்லாத சைவ உணவு சாப்பிடுபவர்கள் 43% எலும்பு முறிவுகளை சந்திக்கக்கூடிய அதிக ஆபத்துகளை எதிர்கொள்வதாகவும் இடுப்பு கால் மற்றும் முதுகு எலும்புகளில் முறிவுக்கான அதிக வாய்ப்புகள் கொண்டு இருப்பார்கள் எனவும் இந்த ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் சைவ விரும்பிகளாக இருந்தாலும் அசைவத்தை வாரம் ஒரு முறையாவது எடுத்துக்கொள்ளுங்கள், உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காக்கலாம்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…