இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்….! அப்ப நீங்க முன்னேறவே முடியாது…!
பொதுவாக வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நோக்கி செல்லாதாவர்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு.
நாம் நமது வாழ்க்கையில் நேர்மறையான வார்த்தைகளை பேசுவதை தான் வழக்கமாக கொள்ள வேண்டும். சில சமயங்களில் நமது வாயில் இருந்து நாம் எப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரிக்கின்றோமோ, அப்படி தான் நமது வாழ்க்கையும் மாறுகிறது. பொதுவாக வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையை நோக்கி செல்லாதாவர்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு.
நாளைக்கு செய்றேன்
ஒரு மனிதன் எந்த ஒரு காரியத்தையும் நாளைக்கு செய்றேன் என்று கூறி, வேலைக்கான நாளை கடத்தி சென்றால், அந்த மனிதன், வாழ்வில் முன்னேறுவது மிகவும் கடினம். ஏனென்றால், நாளை எனது இல்லாத ஒன்று, இன்று மட்டுமே நமது கையில் உள்ளது.
நேரமில்லை
ஒரு மனிதன் அடிக்கடி தனது வாயால், எனக்கு நேரமில்லை என்று அடிக்கடி சொல்லி வந்தால், அந்த மனிதன் அவனது வாழ்வில் முன்னேறுவது கடினம். இப்படி சொல்பவர்கள், ஒரு வேலையை செய்யாமல் இருப்பதற்கு காரணத்தை காட்ட தான், இந்த நேரமில்லை என்ற வார்த்தையை உபயோகிப்பது.
நான் அதிஷ்டசாலி இல்லை
பொதுவாக சிலர் எதாவது ஒரு காரியத்தில் தோல்வியை சந்திக்கும் போது, நான் ஒரு அதிஷ்டம் இல்லாதவன் என்று சொல்வதுண்டு. இப்படி சொல்வதால், சிலரின் வாழ்க்கை அவர்களின் வாயின் வாக்கை போலவே மாறி இடுகிறது. அதிஷ்டம் என்பது செயல்படுபவனின் வாழ்க்கையில் மட்டுமே, பலனளிக்கும். எனவே, இந்த வார்த்தையை உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.
ஆனால்
பொதுவாக சிலர் தங்கள் மீதே நம்பிக்கையற்ற நிலையில் காணப்படுவதுண்டு. அந்த வகையில், நீங்கள் சிலரிடம் சில காரியங்களை சொல்லும் போது, ‘நீ சொல்வதெல்லாம் சரி, ஆனா என்னால முடியாது.’ என கூறுவதுண்டு. இவ்வாறு, எல்லா காரியங்களிலும் ‘ஆனால்’ என்ற வார்த்தையை உபயோகிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம்.
நேரம் சரியில்லை
பொதுவாக பலர் எனக்கு நேரம் சரியில்லை என்று கூறுவதுண்டு. ஆனால், ஒரு மனிதனுடைய வாழ்க்கையில், அவன் பயன்படுத்தும் அனைத்து நேரங்களுமே நல்ல நேரம் தான். ஆனால், அவனது செயற்பாடு சரியில்லாத போது தான் அவன் சில பிரச்சனைகளை சந்திக்க நெறிக்கிடுகிறது. எனவே இந்த வார்த்தையை உபயோகிப்பதை விட்டுவிடுங்கள்.