பெண்களே வேலைக்கு கைப்பை கொண்டு செல்பவரா நீங்கள் ? அப்ப கண்டிப்பா இதை படிங்க
- பெண்கள் அணிந்து செல்லும் கைப்பையில் இருக்க வேண்டியவை மற்றும் இருக்க கூடாதவை.
பெண் என்பவள் வீட்டிற்கு மட்டுமே வேலை செய்யக் கூடியவள் என்ற நிலை மாறி, ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை தற்போது உருவாக்கி உள்ளது. பாரதி கண்டா புதுமை பெண்ணாய், பெண்கள் அனைத்து துறைகளிலும் பெண்கள் விலை செய்து வருகின்றனர்.
பெண்கள் வேலைக்கு செல்லும் போது, கையில் கைப்பை கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட பெண்கள் கண்டிப்பாக இதை படிக்க வேண்டும்.
கைப்பையில் வைத்திருக்க வேண்டியவை
நகல் மட்டும் போதுமானது
பெண்கள் வேலைக்கு செல்லும் போது, பொதுவாக கைப்பை கொண்டு போவதை வழக்கமாக வைத்துள்ளனர். ரயிலில் பயணமா செய்பவராக இருந்தால் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டுபவராக இருந்தால், ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் கைப்பை நமது கணக்குறைவினால் தொலைந்து போகக் கூட வாய்ப்புகள் உள்ளது. எனவே அடையாள அட்டைகளின் நகலை மட்டும் வைத்துக் கொள்வது மிகச் சிறந்தது.
பேனா, கைக்குட்டை
பெண்கள் வெளியில் செல்லும் போது, கைப்பையில் பேனா மற்றும் சில்லறை காசுகள் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், கைக்குட்டை மற்றும் டிஸ்யூ பேப்பர்ஸ் வைத்திருப்பது மிக சிறந்தது.
சிறிய குறிப்பேடு
இன்று அனைவரது கைகளிலும், மிக சாதாரணமாக அலைபேசிகள் தவழுக்கிறது. நம் வெளியில் செல்லும் பொது, அலைபேசியில் சர்ச் தீர்ந்து போனாலோ அல்லது, அலைபேசி தொலைந்து போனாலோ யாரையும் தொடர்பு கொள்ள இயலாது.
எனவே, எப்போது கைப்பையில் சிறிய குறிப்பேடு வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நமக்கு தேவையான நபர்களின் நம்பர்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பணம்
நாம் கொண்டு செல்லும் கைப்பையில் நமக்கு தேவையான அளவு பணத்தை மட்டும் வைத்திருப்பது நல்லது. மேலும், மாத்திரைகள், சேப்டி பின்கள் மற்றும் தைலம் போன்ற பொருட்களை வைத்திருப்பது மிக சிறந்தது.
உங்கள் பாதுகாப்பிற்காக
இன்று இந்த சமூகத்தில் பெண்கள் தைரியமாக வெளியில் செல்ல இயலுவதில்லை. எந்த நடக்கும் என்பது நம்மில் யாருக்கும் தெரியாத ஒன்று. எனவே எப்போதும் நமது பாதுகாப்பிற்காக சிறிய கத்தி மற்றும் பெப்பர் ஸ்ப்ரே ஆகியவற்றை கைப்பையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இருக்க கூடாதவை
கைப்பையில் தேவையில்லாத ரசீதுகள், விசிட்டிங் கார்டுகள் ஆகியவற்றை வைத்திருக்குக வேண்டாம். தேவைக்கு ஒன்றிரண்டு வைத்யுர்ப்பது சிறந்தது. மேலும், அதிக எடையுள்ள பொருட்களை கைப்பையில் வைத்திருப்பதை தவிர்க்கவேண்டும். தேவையான பொருட்களை மட்டும் கைப்பையில் எடுத்துக் கொண்டு தேவையில்லாத பொருட்களை தவிர்க்க வேண்டும்.