பூசணிக்காயில் இப்படிபட்ட அழகு ரகசியங்கள் இருக்கிறதா ?
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள்.
நம் சமையலுக்கு பயன்படுத்தும் பல வகையான காய்கறிகள் நமது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறு நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பூசணிக்காயில் உள்ள சரும அழகின் ரகசியங்கள் பற்றி பார்ப்போம்.
பூசணிக்காயை நன்கு மசித்து, தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தாவி, 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி விடும்.
கண்களில் கருவளையம் உள்ளவர்கள், பூசணிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை கண்களை சுற்றி வைத்தால் கருவளையம் மறைந்து விடும். பூசணிக்காயின் கூழை, முட்டை வெள்ளைக்கரு, பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
முகம் கருப்பாக காணப்பட்டால் அதை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன் சிறுதளவு சக்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 5 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.