தலைவலி என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு வியாதி தான். பலரும் இதை எதிர் கொண்டு இருப்போம். திடீரென்று தலை வலிக்க தொடங்கும் பொழுது என்ன செய்வதென்றே தெரியாத அளவிற்கு குழப்பமான மனநிலை ஏற்படும். இந்த தலைவலியில் பத்துக்கும் மேற்பட்ட வகை தலைவலிகள் இருக்கிறதாம்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நிச்சயம் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுமே ஒருமுறையாவது இந்த தலைவலியால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. தற்பொழுதும் நாம் அனுபவிக்கக் கூடிய தலைவலி எந்த வகை தலைவலி அதன் அறிகுறிகள் என்ன என்பதை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பதற்ற தலைவலி என்பது மிகவும் சாதாரணமானது தான் .அதாவது நாம் எதையாவது அதிகளவில் யோசித்து மன குழப்பம் ஏற்படும்பொழுது ஏற்படக்கூடிய தலைவலி. இந்த தலை வலி ஏற்படும் பொழுது கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதிகளிலும், உச்சந்தலையிலும் வலியை உணர முடியும்.
கொத்து தலைவலி என்பது கடுமையான எரிச்சலுடன் ஏற்படக்கூடிய ஒரு தலைவலி. இந்த தலைவலி ஏற்படும் போது தலையில் காயம் ஏற்பட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும் கண்ணைச் சுற்றிலும், தலையின் பின்புறத்திலும் அதிகப்படியான வலிகளை இந்த தலைவலி ஏற்படுத்துமாம். மேலும் இந்த தலை வலி ஏற்படும் பொழுது சிவந்த கண்கள் மற்றும் வியர்வை அதிகப்படியாக ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இது 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
இது மிக ஆழமான வலியை ஏற்படுத்தக் கூடிய ஒரு தலைவலி. இது தலையின் ஒரு புறத்தில் மட்டுமே வலியை ஏற்படுத்தும். இருப்பினும் தலை முழுவதிலுமே பாரமான ஒரு உணர்வை இது கொடுக்கக்கூடியது. மேலும் இதன் காரணமாக குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படும். இதற்கு காரணம் அதிகப்படியான ஒளிரும் விளக்குகள். ஜிக்சாக் கோடுகள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றை உற்றுப் பார்ப்பதும், அறியாத ஒரு விஷயங்கள் மற்றும் பகுதிகளுக்கு நுழையும் பொழுதும் இந்த தலைவலி ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த ஒற்றை தலை வலி ஏற்படும் பொழுது தூக்கமின்மை அதிக அளவில் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த தலைவலி பெரும்பாலும் நமது சைனஸ் பகுதியில் வலியை ஏற்படுத்தக் கூடியது மேலும் தலையின் முன்பக்கத்தில் பாரமான ஒரு உணர்வை இது கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த சைனஸ் தலைவலி பெரும்பாலும் ஒற்றை தலைவலியை போலவே வலிகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இந்த தலைவலி சைனஸ் நோய் தொற்று அறிகுறியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பெண்களுக்கு பொதுவாகவே ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் அவ்வபோது காணப்படும். இந்த நேரங்களில் பெண்கள் அனுபவிக்கக்கூடிய தலைவலிதான் ஹார்மோன் தலைவலி என கூறப்படுகிறது. மாதவிடாய் ஏற்படும் காலங்கள், கர்ப்பமாக கூடிய காலங்கள், குழந்தைப்பேறு நேரங்கள் உள்ளிட்ட நேரங்களில் இந்த தலைவலி ஏற்படுகிறது.
இந்த மாதவிடாய் மற்றும் மகப்பேறு நேரங்களில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய மாத்திரைகள் நமது ஈஸ்ட்ரோஜன் அளவை பாதிப்பதால் இதுதான் இந்த தலைவலியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதை தடுப்பதற்கு யோகா ஒரு சிறந்த முறையாக அமையுமாம். அது மட்டுமல்லாமல் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதும் இந்த தலை வலியை நீக்குவதற்கு ஒரு நல்ல முறையாம்.
நமது மூளையின் இரத்த ஓட்டத்தை பாதிக்கக்கூடிய தலைவலி தான் காஃபின் தலைவலி. இது ஒற்றை தலை வலி உள்ளவர்களுக்கு தொடர் தலைவலியாக ஏற்படக்கூடிய ஒன்றாம். மூளையில் அதிக அளவிலான தாக்கத்தையும் வலியை ஏற்படுத்தக்கூடிய இந்த தலைவலி காஃபின் அதிகம் உள்ள பொருட்களை உட்கொள்வதாலும் ஏற்படுகிறதாம். குறிப்பாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.
அதாவது மிக அழுத்தமான அதிக பளு உள்ள வேலைகளை செய்ததற்குப் பிறகு ஏற்படக்கூடிய தலைவலி தான் உழைப்பு தலைவலி. ஓடுதல், உடலுறவு கொள்ளுதல், அதிக கனமான பொருளை தூக்குதல் போன்ற செயல்களின் போது இந்த தலைவலி ஏற்படுகிறது என கூறப்படுகிறது. ஏனென்றால் நமது தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் பொழுது தான் இந்த தலை வலி ஏற்படுகிறதாம். இது சில நிமிடங்கள் முதல் பல மணி நேரங்கள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு தான் இந்த தலைவலி ஏற்படும். சில சமயங்களில் இது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுமாம். எனவே இந்த உயர் ரத்த அழுத்த தலைவலி ஏற்படும் போது நிச்சயமாக மருத்துவரை நாம் அணுக வேண்டுமாம். ஏனென்றால் இதன் விளைவாக பார்வை இழப்பு, உணர்வின்மை, மூச்சுத்திணறல், மார்பு வலி ஆகியவை கூட ஏற்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த தலைவலி உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். எனவே ரத்த அழுத்தம் குறைந்த பின்பு அந்த நபர்களுக்கு இந்த தலை வலி போய்விடும் எனவும் கூறப்படுகிறது.
அதாவது மீண்டும் மீண்டும் தலைவலி ஏற்பட்டு அதனை போக்குவதற்காக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் பொழுது ஏற்படுவது தான் தொடர்ச்சியான தலைவலி என கூறப்படுகிறது. இந்த தலைவலி ஒற்றைத் தலைவலி போன்று அதிகப்படியான வலியை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனை தடுப்பதற்கு சிறந்த வழி மருத்துவமனைக்கு சென்று மருந்துகள் வாங்கி அதை தினசரி உட்கொள்வது தான் என கூறப்படுகிறது.
இந்த தலை வலி திடீரென நம்பமுடியாத ஒரு விஷயத்தை கேள்விப்பட்டாலோ, தலையில் பலத்த காயம் ஏற்பட்டாலோ உருவாகலாம் என கூறப்படுகிறது. இந்த தலைவலி 6 முதல் 12 மாதங்கள் வரையிலும் நீடிக்குமாம். இது நாள் பட்ட தலைவலியாக மாறும் பொழுது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
பெரும்பாலும் தலைவலி 48 மணி நேரம் அதாவது இரண்டு நாட்களுக்குள் சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத பட்சத்தில் நிச்சயம் நாம் மருத்துவரை சந்திக்க வேண்டும். சில நேரம் 15 நாட்களுக்கு மேல் தலைவலி இருக்கும். இந்த தலை வலி நாள்பட்ட தலைவலி. எனவே மருத்துவரை அணுகி ஊசி மருந்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. மேலும் யோகா செய்வது தலை வலியை போக்குவதற்கான ஒரு சிறந்த முறையாகவும் கருதப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…