முட்டை கோஸிலும் இவ்வளவு சத்துக்களும் நன்மைகளும் உள்ளதா?
முட்டைகோஸில் உள்ள நன்மைகள்.
கீரை வகைகள் எல்லாமே பார்ப்பதற்கு வெறும் இலைகள் போல இருந்தாலும், தனது இனமாகிய கீரையிலிருந்து வேறுபட்ட தோற்றத்துடன் காணப்படுவது முட்டை கோஸ் மட்டும் தான். இந்த முட்டை கோஸ் உருண்டை வடிவத்துடன் அழகாக இருக்குக்கும். பார்ப்பதற்கு சாதாரணமான காய்கறிகள் போல தெரிந்தாலும், இதிலும் இவ்வளவு நன்மை உள்ளதா? என பார்க்கும் அளவிற்கு அதிகளவு பயன்கள் உள்ளது. உயிர்சத்துக்கள் மற்றும் தாதுச்சத்துக்கள் அதிகளவில் அடங்கி உள்ளது. அவற்றை இங்கு பாப்போம்.
முட்டைகோஸின் பயன்கள்:
வைட்டமின் ஏ சாது இதில் அதிகம் உள்ளதால், கண் பார்வை கோளாறுகளை நீக்கி நல்ல கண் பார்வையை கொடுக்கும், கண் நரம்புகளை பெலப்படுத்தி, தெளிவான பார்வைக்கு வழிவகுக்கும். அஜீரணத்தினால் உண்டாகும், வயிற்று வழிகளை குறைக்கும். மூலம் வியாதிகளை கட்டுப்படுத்தி, நல்ல உடல் நலம் தரும்.
சரும வறட்சியை நீக்கி நல்ல பொலிவான சருமத்தை கொடுக்கும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும். வியர்வை பெருக்கியாக செயல்படுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள், நீர்கள் வெளியேற்றப்படும். சுண்ணாம்பு சாத்து அதிகம் உள்ளதால், இது எலும்புகளுக்கு நல்ல சக்தியை அளிக்கிறது.
உடல் வெப்பத்தை குறைக்கும், ரத்தத்தை சுத்திகரித்து நல்ல உடல் னால அளிக்கும். தலை முடி உதிர்வை தடுத்து, நல்ல அடர்த்தியான முடி வளர வழி வகிக்கும். உடலுக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். நரம்புகளுக்கு நல்ல வலுவை அளிக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும். தோற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இவ்வளவு சத்துக்களும், மருத்துவ குணங்களும் உள்ள இந்த முட்டை கோஸை அதிகளவில் உருக்கொண்டு நல்ல பலனை பெறுவோம்.