மிளகாயில் இவ்வளவு மருத்துவக்குணங்களா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
- மிளகாயின் மருத்துவகுணங்கள்
- மிளகாயின் நன்மைகள்
மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு தலைவனாக விளங்கும் இந்த மிளகாய் சில மருத்துவக்குணங்களையும் உள்ளடக்கியது என்பது நிதர்சமானமாகிய உண்மை.
மிளகாயின் மருத்துவகுணங்கள்:
உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறதுபக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.
மிளகாயின் நன்மைகள்:
சமையலுக்கு முக்கியமாக உதவுகிறது. இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது. சமையல் தவிர சில மருந்து பொருளாகவும் உதவுகிறது.