மாம்பழத்திலும் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா?
மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறது வழக்கம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் மாநிலத்தில் உண்டோ எனும் பழமொழியே உள்ளது. சுவைக்காக சாப்பிடக்கூடிய இந்த மாம்பழத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது, அவைகளை பார்ப்போம்.
மாம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள்
இரத்த அழுத்தத்தை போக்குவதில் மாம்பழம் அதிக பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, உடல் எடையை அதிகரிக்க மாம்பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். 150 கி பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கு மிகவும் முக்கிய பங்காற்றும் இந்த மாம்பழம், வயிற்றில் நொதிகள் உருவாக உதவுகின்றது.
இரத்தசோகையை நீக்கும் உடலை பாதுகாக்கிறது, கர்ப்பிணிகளுக்கு தேவைப்படக்கூடிய அதிக இரும்பு சத்துகளை இதுவே வழங்குகிறது. முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கி, இளமையான தோற்றத்தை கொண்டு வருகிற. மூளை வளர்ச்சி மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை இது கொடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு மாம்பழத்தின் இலை மிகவும் நல்லது. கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக் கூடிய இந்த மாம்பழம் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியதாகும். உடலிலுள்ள புற்றுநோய் செல்களை அழிக்க இது சிறந்த தீர்வாகும்.