இந்த சின்ன விதையில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..? இனிமே இந்த விதையை தூக்கி எறியாதீங்க மக்களே…!
தர்ப்பூசணி பழ விதையில் உள்ள நன்மைகள்.
நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அறிந்த ஒரு பழம் தான் தர்ப்பூசணி. தர்பூசணி பழம் நமது தாகத்தை தணிக்கக் கூடிய, பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு கோடைகால பழம் ஆகும். இது நமது உடலை நீர் சத்து வற்றி போகாமல் வைத்திருப்பதுடன், பலவித நன்மைகளையும் அளிக்கிறது.
பெரும்பாலும் நாம் இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும் போது, விதையை எறிந்துவிட்டு பழத்தை மட்டும் தான் சாப்பிடுவது உண்டு. ஆனால் இந்த பழத்தின் விதையை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தில் மெக்னீஷியம், துத்தநாகம், இரும்பு, நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
உடல் எடை
இன்று பலரும் உடல் எடையை குறைக்க விரும்புவதுண்டு. அப்படி உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த பழத்தின் விதை ஒரு நல்ல மருந்தாகும். தர்பூசணி விதையில் கலோரிகள் மிகக் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த பழத்தின் விதையை அப்படியே சாப்பிட்டலாம். அல்லது அதனை வறுத்தும் சாப்பிட்டலாம்.
இதயம்
தர்பூசணி பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு தர்பூசணி விதையில் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பட்சத்தில், எந்த ஒரு நோயாக இருந்தாலும் அது எளிதில் நம்மை தாக்கும். தர்பூசணி விதையில் காணப்படும் இரும்பு மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நீரிழிவு
இன்று மிகச் சிறிய வயது உள்ளவர்களுக்கு கூட நீரிழிவு நோய் காணப்படுகிறது. தர்பூசணி விதை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு தர்ப்பூசணி விதை ஒரு நல்ல மருந்தாகும்.
மூளை
தர்பூசணி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் இது மூளை மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விதையில் வைட்டமின் பி அதிகமாக காணப்படுவதால், இது மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.