இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா? ஆனா இந்த காயை நாம் கண்டுகிறதே இல்லங்க

Published by
லீனா

சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்.

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோனோர் சுண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால், இந்த காயில் லேசான கசப்பு தன்மை காணப்படும். பெரும்பாலானோர் இந்த காயை கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இந்த காயில் நமது உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது உடலில் தேவையில்லாத தீய வைரஸ்கள் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம்.

இந்த காயில் ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி  போன்ற பழங்களுக்கு நிகராக, இந்த சுண்டைக்காயிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் வெள்ளையணுக்கள் அதிகரிக்க செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இரத்தம்

நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில், சுண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி,  இரத்தத்தில்  தேவையில்லாமல் உறையும் கொழுப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புசத்து இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சளி பிரச்சனை

சளி பிரச்னை உள்ளவர்கள், இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இது தேங்கி இருக்கும் சளியை வெளியேற்றி, ஆரோக்கியத்தை அளிக்கிறது.

நரம்பு

இந்த காயை அடிக்கடி சாப்பிட்டால், நரம்பு மண்டலத்திற்கு சக்தியை அளிப்பதோடு, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து, கண் பார்வையை தெளிவாக்க உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

1 hour ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

3 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

3 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

4 hours ago

இன்று இந்த 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…

4 hours ago