இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா? ஆனா இந்த காயை நாம் கண்டுகிறதே இல்லங்க
சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலோனோர் சுண்டைக்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனென்றால், இந்த காயில் லேசான கசப்பு தன்மை காணப்படும். பெரும்பாலானோர் இந்த காயை கண்டுகொள்வதே இல்லை. ஆனால், இந்த காயில் நமது உடலில் உள்ள பல வியாதிகளை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடலில் தேவையில்லாத தீய வைரஸ்கள் பல நோய்களை ஏற்படுத்தக் கூடும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம்.
இந்த காயில் ஆரஞ்சு, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களுக்கு நிகராக, இந்த சுண்டைக்காயிலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலில் வெள்ளையணுக்கள் அதிகரிக்க செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
இரத்தம்
நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில், சுண்டைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இரத்தத்தில் தேவையில்லாமல் உறையும் கொழுப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புசத்து இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
சளி பிரச்சனை
சளி பிரச்னை உள்ளவர்கள், இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இது தேங்கி இருக்கும் சளியை வெளியேற்றி, ஆரோக்கியத்தை அளிக்கிறது.
நரம்பு
இந்த காயை அடிக்கடி சாப்பிட்டால், நரம்பு மண்டலத்திற்கு சக்தியை அளிப்பதோடு, ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து, கண் பார்வையை தெளிவாக்க உதவுகிறது.