சாதாரணமாக பழங்கள் என்றாலே அது இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வாரம்தான். உடலில் காணப்படக்கூடிய தேவையற்ற நோய்களை நீக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். உலர் திராட்சை உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அதில் உள்ள நன்மைகள் பலருக்கும் தெரியாது. அவைகள் பற்றி அறியலாம் வாருங்கள்.
திராட்சைப் பழவகைகளில் நல்ல திராட்சைகளை பதப்படுத்தி உலர வைத்து அவற்றை உலர்திராட்சையாக கடைகளில் விற்கின்றனர். ஆனால் அவை நமக்கு மலிவாக கிடைப்பதால் ஏதோ காய்ந்த பழம் போல என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அந்த பழத்தில் உடனடியாக பாறிக்கப்பட்ட பழங்களில் உள்ளதைவிட பல மடங்கு சத்துக்கள் உள்ளது. சாதாரணமாக உலர் திராட்சையில் வைட்டமின் சத்துக்கள் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை அதிக அளவில் காணப்படுகிறது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைக்கப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் உள்ள சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய அமில தொந்தரவுகளை அகற்ற இது உதவுகிறது. ரத்த சோகையை நீக்க உதவுவதோடு ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் சமமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த உலர் திராட்சையை தினமும் ஒரு கைப்பிடி அளவு உட்கொண்டு வந்தால் மிக குறிப்பிட்ட நாட்களிலேயே மஞ்சகாமாலை முற்றிலும் குணமடையும். மேலும் மலச்சிக்கல் போன்ற இயற்கை உபாதைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை காரணமாக இது ஜீரண சக்தியை அதிகரித்து உடலில் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடும் போது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி தருவதுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும்உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த நிவாரணம். ஏனென்றால் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் அமினோ ஆசிட், மினரல்ஸ் ஆகியவை காரணமாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடுப்பதுடன் உடல் எடை அதிகரிக்கவும் இது உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…