கொய்யா பழத்தில் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் பாப்போம்!
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகளும், மருத்துவ குணங்களின் உள்ளன. அவைகளை பற்றி இன்று பார்ப்போம்.
கொய்யா பழத்தின் நன்மைகள்
உடலுக்கு வலு தரக்கூடிய பல தாதுக்களும் வைட்டமின்களும் கொய்யா பழத்தில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் டி மற்றும் சி, கால்சியம் ஆகிய சத்துக்கள் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கொய்யாவிலுள்ள லைக்கோபீனே எனும் செல் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
குறைவான சர்க்கரையும், அதிகப்படியான நார்ச்சத்தும் கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை உட்கொள்வது நல்லது. வைட்டமின் ஏ சத்துக்கள் இதில் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிக்கு, கருவிலிருக்கும் குழந்தைக்கும் கண் குறைபாடுகள் வராமல் தடுத்துடன் நரம்புகள் சீராக வளர்ச்சியடைய உதவுகிறது.