பூண்டு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறிந்து கொள்ளலாம் வாருங்கள்!
உணவில் அதிகம் பயன்படுத்த படக்கூடிய பூண்டு சாப்பிடுவதால் நாம் நினைப்பதை விட அதிகமான ஆரோக்கிய வாழ்வு வாழலாம். பூண்டின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பூண்டின் ஆரோக்கிய நன்மைகள்
பூண்டில் அதிகளவில் தாதுக்கள், வைட்டமின்கள், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இந்த பூண்டை வெறும் வயிற்றிலும், சமைத்தும் சாப்பிட்டு வரும் பொழுது நிறைய நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக பச்சையாக பூண்டை சாப்பிடும் பொழுது உடல் எடை குறைவதோடு உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவதால் அவர்களின் ஆண்மை தன்மை அதிகரிக்க உதவுவதுடன், அவர்களின் பாலியல் சம்பந்தமான ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. பூண்டில் காணப்படக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின் சி பி6 மற்றும் கனிமங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வெறும் வயிற்றில்பூண்டை சாப்பிடுவதால், அது சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக்காக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தை நீக்க உதவுவதுடன் வியர்வை சுரப்பிகளை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் பூண்டை அதிக அளவில் சாப்பிடலாம். இதன் மூலம் தாய்ப்பால் அதிகம் உருவாகவும் உதவி செய்கிறது. சளித் தொல்லையை நீக்க உதவுவதுடன், சுவாச தடையை நீக்கவும் உதவுகிறது. மேலும் ரத்தக் கொதிப்பை தணிக்க உதவுவதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவுகிறது. இத்தனை நன்மைகள் நிறைந்த நம் வாழ்வில் அடிக்கடி உபயோகிப்போம், நன்மைகளை பெற்றுக் கொள்வோம்.